சென்னை: 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்து திரும்பப் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் (JAAC) பொதுக்குழு திருவண்ணாமலையில் நடந்தது. நீதிமன்ற புறக்கணிப்பை தற்காலிகமாக ஒத்திவைத்து ஆகஸ்ட்.5-ம் தேதி முதல் செப்டம்பர்.30 வரை பணிக்கு செல்லவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பின்னர் ஆலோசிக்கலாம் என்றும் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.