மதுரை, நவ. 15: மதுரை வலையங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று (நவ.15ம் தேதி, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குறுணி, நல்லூர், குசவன்குண்டு. மண்டேலா நகர், சின்னஉடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.