Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிகர அந்நிய நேரடி முதலீடு சரிவு இந்தியாவை விட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுகின்றனர்: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘நிகர அந்நிய நேரடி முதலீடு சரிவு, நாட்டில் மிகப்பெரிய முதலீட்டு நிச்சயமற்ற தன்மையை பிரதிபலிக்கிறது’ என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த மே மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையில், 2024-25ம் ஆண்டில் இந்தியாவில் நிகர அந்நிய நேரடி முதலீடு வரவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 96 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 0.4 பில்லியன் டாலர்களாக (ரூ.3,400 கோடி) குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் நிகர அந்நிய நேரடி முதலீடு 10.1 பில்லியன் டாலராக (ரூ.85,850 கோடி) இருந்தது. கடந்த 10 ஆண்டில் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் இருந்து தங்கள் பணத்தை வெளியில் எடுத்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்த திடீர் வீழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை மறைக்க வெள்ளையடிக்கும் செயல்கள் எதுவாக இருந்தாலும், இது இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டு நிச்சயமற்ற தன்மையை பிரதிபலிக்கிறது என்பதே உண்மை. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல இந்திய நிறுவனங்களும் உள்நாட்டில் முதலீடு செய்வதை விட வெளிநாட்டில் முதலீடு செய்ய விரும்புவதை காட்டுகிறது’’ என கூறி உள்ளார்.