புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூலானது கடந்த ஆண்டைக்காட்டிலும் 1.39 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரையிலான கால கட்டத்தில் முன்கூட்டிய வரி வசூல் 3.87 சதவீதம் என்ற சொற்ப அளவில் அதிகரித்து ரூ.1.56 லட்சம் கோடியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக ஏப்ரல் 1 முதல் ஜூன் 19 வரையிலான காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூலானது கடந்த நிதியாண்டைக்காட்டிலும் 1.39 சதவீதம் சரிவடைந்து ரூ.4.59 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.4.65 லட்சம் கோடியாக பதிவாகி இருந்தது.
நிகர நேரடி வரி வசூலில் 1.39 சதவீதம் சரிவு
0