காத்மாண்டு: நேபாளத்தில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 14 இந்தியர்கள் உயிரிழந்தனர். நேபாளத்தில் 40 இந்தியர்களுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேபாளத்தின் தனாகுள் மாவட்டத்தில் பாயும் மர்ஸியாங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. பொகாராவில் இருந்து காத்மாண்டு சென்றுகொண்டிருந்தபோது பேருந்து விபத்தில் சிக்கியது. ஆற்றில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கிய பயணிகளில் 17 பேர் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.