நேபாளம்: நேபாளம் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 157ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 157 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவானது.