மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் முழு விவர பட்டியலை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நியோமேக்ஸ் நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு தங்கள் சொத்துகளை விற்று பிரச்சனைக்கு தீர்வு காண கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து, பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நியோமேக்ஸ் நிறுவனத்தின் 9,428 சொத்து விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளது என வழக்கில் புதிய தகவல் கிடைத்துள்ளது.