மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒரு இயக்குநரான சிவகங்கை மலைச்சாமி கைதாகினார். நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிதி நிறுவனங்களில் பகுதி இயக்குநராக இருந்த மலைச்சாமி கைதுசெய்யப்பட்டார். அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.