நெல்லை: நெல்லை மாவட்டம் இடையன்குடியில் பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்கள் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனியார் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், நூலகர் தாக்கியதாக புகார் எழுந்தது. தலைமை ஆசிரியர் சாலமன் இமானுவேல், தமிழ் ஆசிரியர் இமானுவேல், நூலகர் ஆல்பர்ட் மோசஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் மீதும் சிறுவர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.