நெல்லை: நெல்லையில் கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த 2 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரவில் செல்போனில் ஆபாசமாக பேசி கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த பேராசிரியர் ஜெபஸ்டின் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டை அரசு உதவிபெறும் தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்கள் ஜெபஸ்டின் (40), பால்ராஜ் (40) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் விடுதியில் மது அருந்திய ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மதுபோதையில் மாணவிக்கு போன் செய்து மது அருந்த அழைத்துள்ளனர். மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரில் பேராசிரியர் ஜெபஸ்டினை போலீஸ் கைது செய்தது. தலைமறைவான பேராசிரியர் பால்ராஜூக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.