வேலூர்: மே.வங்கத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் வேலூர் அருகே சென்றபோது பிரேக் பைண்டிங்கில் புகை ஏற்பட்டதால் நடுவழியில் நின்றது. சுமார் 15 நிமிடத்திற்குப் பின் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் பிரேக் பைண்டிங்கில் புகை என ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.