நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க 18-ம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளனர். 9 ஆண்டுகளுக்கு பின்னர் பாபநாசம் அணைக்கு மேல் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர். சுற்றுலா பயணிகள் காரில் சென்று பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.