Friday, March 1, 2024
Home » நெல்லை மாவட்டத்தில் 18 வயதுக்கும் குறைவான பெண் சிறார் 1448 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளது: தகவல் அறியும் உரிமைச் சட்டம்

நெல்லை மாவட்டத்தில் 18 வயதுக்கும் குறைவான பெண் சிறார் 1448 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளது: தகவல் அறியும் உரிமைச் சட்டம்

by Arun Kumar
Published: Last Updated on

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 2021 ஜனவரி தொடங்கி 2023 அக்டோபர் மாதம் வரை 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண் சிறார்கள் 1448 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலப்பாளையம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மட்டும் அதிகபட்சமாக 88 சிறுமிகள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். மானுர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 44 பெரும் வன்னி கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 43 பெரும் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். பள்ளி கல்லூரிகளில் இடைநிற்றல் என்பதே மிகபெரிய காரணமாக கூறப்படுகிறது. 18 வயதிற்கு முன்பே திருமணம் நடத்தப்படுவதும் சிறுவயது குழந்தை பேருக்கு காரணமாக அமைகிறது.

பள்ளி, கல்லூரிகளில் இடைநிற்றல் குறைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு வார கணக்கில் வாராத பெண் குழந்தைகள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது என்றும் 18 வயதிற்கு முன் பெற்றோர்களால் திருமணம் நடத்தப்படுவது தடுக்கப்படுகிறது, ஆனால் காதல் திருமணத்தை தடுக்க முடியவில்லை என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

18 − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi