Wednesday, February 28, 2024
Home » நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.58 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.58 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Suresh

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.2.87 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. இன்று முதல்கட்டமாக 21 பேருக்கு ரூ.58 லட்சம் நிவாரணத் தொகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்த 1,064 பேருக்கு நிவாரணம் ரூ.1.06 கோடி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளதாவது; “வரலாறு காணாத கன மழை வெள்ளத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் உத்தரவுப்படி தலா ரூ. 5 லட்சத்தை நிவாரண நிதியாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கினோம்.

மேலும், மழை வெள்ளத்தால், கால்நடை மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண நிதி என மொத்தம் ரூ.58 லட்சத்து 14 ஆயிரத்தை முதற்கட்டமாக வழங்கினோம். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நமது கழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என கூறினோம் ” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

19 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi