நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சாதிய மோதல்கள் உள்ள பள்ளிகள் கணக்கு எடுக்கப்படும் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சாதிய மோதல் உள்ள பள்ளிகளை கணெக்கெடுத்து அங்கு காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். பள்ளி மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும். சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் கயிறு, பட்டை போன்றவற்றை மாணவர்கள் அணிவது தடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாணவருக்கு அரிவாள்வெட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த வள்ளியூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.