சென்னை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடலில் குளித்த ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.