நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பருவத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் கொடுத்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இண்டஸ்ட்ரியல் லா பாடத்தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மே 27ல் ஒத்திவைக்கப்பட்ட இண்டஸ்ட்ரியல் லா தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.