நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே 4 வழிச்சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, அமீர் அப்பாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேர், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.