புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் மறைந்த நேருவின் 61வது நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரை நினைவு கூர்ந்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், நாட்டிற்கு சேவை செய்வதில்தான் குடியுரிமை உள்ளது என்ற நேருவின் மேற்கோளை பகிர்ந்து கொண்டார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில்,” சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நிறுவுவதில் நேருவின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. ஜவஹர் சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.