கடலூர்: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் ரூ.50,000 வழங்க கோரி என்எல்சி ஒப்பந்த தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்னனர். 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.