சென்னை: எதிர்மறை விமர்சனம் மூலம் எதிரிகளை வீழ்த்துவதை விட நேர்மறை விமர்சனம் மூலம் கட்சியை வளர்ப்பதே சரியானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை செனாய் நகரில் சமூக வலைதள தன்னார்வலர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நீட் விலக்கு – நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின் என என்னை கலைஞர் கூறினார் என முதலமைச்சர் தெரிவித்தார்.