சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் பைரவி(18). பெரிய சிறுவத்தூரில் உள்ள அரசினர் மாதிரிப்பள்ளியில் கடந்த வருடம் பிளஸ்2 பொதுத் தேர்வில் 485 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படிக்க பைரவி ஆசைப்பட்டதால், பெற்றோர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக சேர்த்தனர். நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சரியாக படிக்க முடியவில்லை என பெற்றோரிடம் பைரவி கூறி வந்துள்ளார். இதனால், மன அழுத்தத்தில் இருந்து வந்த பைரவி, வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வயலுக்கு அடிக்கக்கூடிய களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். உறவினர்கள் பைரவியை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பைரவி உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.