சென்னை: நீட் தேர்வின் பாதிப்பை புரிந்து கொள்ள ஒன்றிய அரசு மறுப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். நீட் விலக்கு கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். முதுநிலை மருத்துவ நீட் தேர்வில் பூஜ்ஜியம் வாங்கினால் மருத்துவராகிவிட முடியும். நீட் தேர்வால் தரமான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்று கூறப்படுவது பொய் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.