புதுடெல்லி: நடப்பாண்டில் மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜயன் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்ற போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியாமல் சிரமத்தை சந்தித்ததாக கூறி சில மாணவர்களால் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து அந்த மனுவானது நீதிபதி நீதிபதி சுபோத் அபயங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து அப்போது, நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு மாணவர்களின் நிலை குறித்து நீதிபதி விளக்கியுள்ளார். குறிப்பாக நீதிமன்றத்தில் பெரிய அளவிலான ஜன்னல்கள் இருந்தும் குறைந்த அளவிலான வெளிச்சமே உள்ளே வருகிறது. ஆனால் தேர்வு மையங்களில் பெரிய அளவிலான ஜன்னல்கள் இருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. எனவே மாணவர்கள் சிரமத்தை சந்தித்திருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மேற்கண்ட நகரங்களில் மட்டும் தேர்வை மீண்டும் நடத்த தேசிய தேர்வு முகமை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
குறிப்பாக எந்தத் தவறும் செய்யாத மாணவர்களுக்கு பாதகமான சூழலை உருவாக்கியதால் அவர்களுக்கு மறு தேர்வு கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மறு தேர்வு முடிவுகளைப் பொறுத்து மருத்துவ கவுன்சிலிங் இருக்க வேண்டும். குறிப்பாக தேசிய தேர்வு முகமை நீட் தேர்வின் தற்காலிக விடை குறிப்பை வெளியிட்ட ஜூன் 3ம் தேதிக்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதாரர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவு என்பது பொருந்தக் கூடியதாகும் என்று உத்தரவிட்டனர்.