சென்னை: நீட் தேர்வு சமூகத்திற்கு எதிரானது, சமூகநீதிக்கு எதிரானது, மாணவர்களுக்கு எதிரானது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணியினரின் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் வைரமுத்து கையெழுத்திட்டார். நீட் தேர்வுக்கு எதிராக எனது கையெழுத்தும் இடம் பெறுவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். தேர்வெழுதியே மாணவர்கள் வாழ்நாள் கழிந்துவிடுகிறது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும் எனவும் கூறியுள்ளார்.