புதுடெல்லி: நீட் இளங்கலை தேர்வுக்கான வினாத்தாளை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொறியாளர் உட்பட இரண்டு பேரை ஜார்க்கண்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே 12 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் வினாத்தாளை திருடிய குற்றச்சாட்டில் முக்கிய நபர் உட்பட இரண்டு பேரை சிபிஐ அதிகாரிகள் ஜார்கண்டில் கைது செய்துள்ளனர். ஹசிராபாக்கில் தேசிய தேர்வு முகமையின் பெட்டியில் இருந்து நீட் வினாத்தாளை திருடியதாக கூறப்படும் பங்கஜ்குமார் என்கிற ஆதித்யா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் முடித்தவர். பொகாரோ பகுதியை சேர்ந்த இவரை சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் இருந்து கைது செய்துள்ளனர். மேலும் வினாத்தாளை திருடுவதற்கு பங்கஜ் குமாருக்கு உதவியதாக கூறப்படும் ராஜூ சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் ஜார்க்கண்டில் பொறியாளர் உட்பட 2 பேர் கைது
47
previous post