புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.இந்நிலையில், பீகாரின் நாளந்தாவைச் சேர்ந்த நீட் தேர்வு எழுதிய மாணவன் சன்னி மற்றும் கயாவைச் சேர்ந்த மற்றொரு மாணவனின் தந்தை ரஞ்சித் குமார் ஆகியோரை சிபிஐ நேற்று கைது செய்தது. இந்த வழக்கில் இதுவரை பீகாரில் 8 பேரும், குஜராத்தில் 2 பேரும், உத்தரகாண்ட்டின் டேராடூனில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு பீகாரில் 2 பேரை கைது செய்தது சிபிஐ
33