அகமதாபாத்: அகமதாபாத்தை சேர்ந்த டாக்டர் தீபக் வியாஸ் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சமிஸ்த் வியாஸ் கடந்தாண்டு எம்பிபிஎஸ் முடித்தார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும் நீட் முதுநிலை தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் வெளியான நிலையில் தந்தையை விட மகன் அதிக மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து தீபக் வியாஸ் கூறுகையில், கடந்த 28 வருடமாக மருத்துவராக பணியாற்றி வருகிறேன். எனது மருத்துவ அறிவு திறனை சோதிப்பதற்காகவும், தற்போதுள்ள தேர்வு நடைமுறையை தெரிந்து கொள்வதற்காகவும் மகனுடன் நீட் முதுநிலை தேர்வு எழுதினேன் என்றார்.