காரியாபட்டி: சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரை சேர்ந்தவர் புகழீஸ்வரன் மகன் ராகுல் தர்ஷன் (17). பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார்.
தோல்வி பயத்தில் இருந்த அவர், நேற்று முன்தினம் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன், வீட்டு மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.