டெல்லி : முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ தேர்வு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜூன் 15ம் தேதி நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு காலை, மாலை என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. 2 கட்டங்களாக நீட் முதுநிலை நுழைவு தேர்வை ஒன்றிய அரசு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
2 லட்சம் மாணவர்களுக்கு ஒரே கட்டமாக தேர்வு நடத்த முடியாதா என்று தேசிய மருத்துவ தேர்வு வாரியத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளது. தேர்வு தாமதமாகும், மாணவர் சேர்க்கை தாமதமாகும் என்ற ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை வெளிப்படை தன்மையுடன் பாதுகாப்புடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தேசிய மருத்துவ தேர்வு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.