டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அனைத்து தேர்வர்களுக்கும் மின்னஞ்சலில் மதிப்பெண் விவரம் அனுப்பப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகின
0