கோடா: ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் 4 மணி நேர இடைவெளியில்அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 22 நீட் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அதிகமாகும். கடந்த ஆண்டு 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் மாநில அரசின் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி முதன்மை செயலாளர் பவானி சிங் தத்தா , கோட்ட மாவட்ட மூத்த அதிகாரிகள், கலெக்டர், கூடுதல் கலெக்டர், பயிற்சி மைய நிர்வாகிகள், விடுதிசங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ஆராய்வது மற்றும் தற்கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இதில் பேசப்பட்டது. அப்போது, நீட் பயிற்சி மையங்களில் அடுத்த 2 மாதத்துக்கு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.