சென்னை: சென்னையில் மின்சாரம் துண்டிப்பால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மே 4ம் தேதி நீட் தேர்வு நடந்தபோது சென்னையில் மழை காரணமாக ஆவடி தேர்வு மையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத முடியவில்லை என 16 பேர் மறுதேர்வு நடத்தக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்திருந்தது.
நீட் தேர்வு முடிவை வெளியிடத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு; சிசிடிவி காட்சியை சமர்ப்பிக்க ஆணை!!
0