சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கையெழுத்து இயக்கத்துக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதால் வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.