டெல்லி: இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் என்ற கவுரவப் பதவியை இந்திய ராணுவம் வழங்கி உள்ளது. நீரஜ் சோப்ரா 2016 இல் இந்திய ராணுவத்தில் நைப் சுபேதார் என்ற பதவியுடன் ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக சேர்ந்தார். ஈட்டி எறிதல் விளையாட்டில் தனது திறமையால் இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்டு வந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்துடன் அவர் வரலாறு படைத்தார்.அவரது சேவைகளைப் பாராட்டி, அவருக்கு 2018 இல் அர்ஜுனா விருதும், 2021 இல் விசிஷ்ட சேவா பதக்கமும் வழங்கப்பட்டது. அதே ஆண்டில், சோப்ரா சுபேதாராக பதவி உயர்வு பெற்றார்.
நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி
0