பர்மிங்காம்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட்அணிகள் இடையே 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் 2வது டெஸ்ட் பர்மிங்காமில் இன்று தொடங்கியது. இந்த போட்டி பற்றி இந்திய கேப்டன் கில் கூறியதாவது: லோயர் ஆர்டர் பேட்டிங் பிரச்னை நாங்கள் எப்போதும் பேசக்கூடிய ஒரு விஷயமாகும். சில நேரங்களில் உலகின் மற்ற அணிகளைப் போல எங்களுடைய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் பங்காற்ற முடிவதில்லை.
அவர்களிடம் மற்ற அணிகளை பாருங்கள் என்று தெரிவித்துள்ளேன். முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் நானும், பன்ட்டும் சேர்ந்து இன்னும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஒருவேளை நல்ல பந்தில் அவுட்டானால் அது பரவாயில்லை. ஆனால் பேட்டிங் வரிசையில் போதுமான ஆழமில்லை. எனவே டாப் ஆர்டரில் ஆடும் வீரர்கள் நன்றாக செட்டிலாகி இன்னும் கொஞ்சம் பொறுப்பை எடுத்துக்கொண்டு போட்டி முழுமையும் பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும், என்றார்.