பள்ளிப்பட்டு: மேல்திருத்தணி நுழைவாயலில் எல்.இ.டி சிக்னல் அமைக்க வேண்டும் என டி.எஸ்.பி.யிடம் மனு அளிகப்பட்டது. தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், திமுக பிரமுகருமான இ.கே.உதயசூரியன், திருத்தணி டி.எஸ்.பி யான டி.எஸ்.விக்னேஷை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில், திருத்தணி பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு வரை செல்லும் மாநில முதன்மை நெடுஞ்சாலை (106)ல் தினமும் ஏராளமான கனரக வானங்கள், பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றது.
100க்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள் இச்சாலையில் சென்று வருகின்றனர். எனவே, திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டைக்குச்செல்ல மேல் திருத்தணி வளைவு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேல் திருத்தணி நுழைவாயில் பகுதியில் பயணிகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் எல்.இ.டி. சிக்னல் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.