திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா அளித்த பேட்டி: தனியார் விமானங்கள் பழுது ஏற்படுகிறது. அதை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று தமிழ் சினிமா உலகமே போதைப்பொருளில் சிக்கியுள்ளது.
பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு பிஜேபி தான் காரணம் என செல்வப்பெருந்தகை கூறியிருப்பது, பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது போன்று கேவலமாக உள்ளது. தமிழக என்டிஏ முதல்வர் வேட்பாளரை பாஜ நாடாளுமன்ற குழு முடிவு செய்யும். டெல்லியில் மோடி உள்ளது போல், தமிழ்நாட்டில் எடப்பாடி இருப்பார். இவ்வாறு கூறினார்.