இந்திய ராணுவத்தில் என்சிசி பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lieutenant (NCC Special Entry) (58th) (October Batch).
மொத்த காலியிடங்கள்: 70. (இதில் 6 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது). பெண்கள்-6. (இதில் ஒரு இடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது).
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 19 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று என்சிசி யில் ‘சி’ சான்றிதழ் தேர்வில் குறைந்த பட்சம் ‘ பி’ கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கல்வித்தகுதி: இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்சிசி சான்றிதழ் தேவையில்லை. பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள்-உயரம்- 157 செ.மீ., உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். பெண்கள்- உயரம்-152 செ.மீ., எடை- 42 கிலோ.
உடற்திறன் தேர்வு: 24 கி.மீ., தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடி கடக்க வேண்டும். சிட்அப்ஸ்-25, புஷ்அப்ஸ்-13, சின்அப்ஸ்-6, 3-4 மீட்டர் தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பிரயாக்ராஜ், போபால், பெங்களூரு, ஜலந்தர் ஆகிய மையங்களில் எஸ்எஸ்பி தேர்வு நடைபெறும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சென்னையில் ஆபீசர் டிரெய்னிங் அகடமியில் 49 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும். பயிற்சி அக்டோபரில் தொடங்கும். பயிற்சிக்குப் பின் லெப்டினென்ட் பணி வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2025