பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டேபாரா கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் போலீசார், மாநில போலீசார் மற்றும் சிறப்பு படை, சிஆர்பிஎப் வீரர்கள் ஒன்றிணைந்து காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் நக்சல் ஒருவர் உயிரிழந்தார்.