நன்றி குங்குமம் ஆன்மிகம்
நவராத்திரி காலத்தில் ஹோமம் செய்வது அதீத பலன்களை தரும். அதில் முக்கியமானவை; `மஹாகணபதி ஹோமம்’ விக்னங்கள், தடங்கல்கள் விலகும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி பெருகும், நல்ல ஆரோக்கியம், வியாபாரத்தில் வெற்றியடைய செய்யும். `தசமஹாவித்யா ஹோமம்’ இந்த ஹோமம் செய்வதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த குடும்ப வாழ்க்கை, பொருள் லாபம், ஆத்ம லாபம், வாழ்வில் நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். `ஸ்ரீவித்யா ஹோமம்’ என்னும் ஹோமத்தை செய்வதால், கல்வியில் சிறந்து விளங்க உதவுகிறது. `புருஷ ஸுக்த ஹோமம்’ செய்தால், வாழ்வில் வெற்றி, குழந்தைச் செல்வம், குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் கிட்டும்.
`ஸ்ரீஸுக்த ஹோமம்’ செய்வது அளவில்லா பலன்களை தரக்கூடியது. ஸ்ரீஸுக்ததிற்கு அதிபதி மகாலட்சுமிதேவி. ஆகையால், இந்த ஹோமத்தை செய்வதால், பெருஞ் செல்வம் வீட்டில் சேரும். மன நிம்மதி, ஆயுள் ஆரோக்கியம் என சகல சொளபாக்கியங்களும் கிடைக்கும். `தக்ஷிண காளி ஹோமம்’ பொதுவாக இந்த ஹோமத்தை நியாயமான எதிரிகளிடமிருந்து காப்பதற்காக செய்யப்படுகிறது. ஏதேனும் வழக்குகள் இருந்தாலும் இந்த ஹோமத்தை செய்வதனாலும் வழக்குகளில் இருந்து வெற்றி பெறலாம்.
`லலிதா ஸஹஸ்ரநாம ஹோமம்’, ஒருவர் வாழ்வில் புகழின் உச்சத்தை எட்டவும், மதிப்பும் – மரியாதையும் ஏற்படவும் இந்த ஹோமத்தை செய்யலாம். `ஷோடசி ஹோமம்’ இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் உயரக சொகுசான பொருட்கள் சேரும். `குருமண்டல ஹோமம்’, இந்த ஹோமத்தை சிரத்தையுடன் செய்வதால் மகான்களின் அனுகிரஹம், குருவின் அனுகிரஹம் மற்றும் அம்பாளின் அனுகிரஹம் கிடைக்கும். அடுத்ததாக, `லலிதா த்ரிசதி ஹோமம்’ செய்வதினால், ஆத்ம லாபம், வாழ்வில் நம்பிக்கை, உற்சாகம் ஏற்படும்.
`புவனேஸ்வரி ஹோமம்’, ஆரோக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். `அன்னபூர்ணா ஹோமம்’ இந்த ஹோமத்தை பற்றி அனைவருக்கும் தெரிந்ததே! சாப்பாட்டிற்கு பஞ்சம் ஏற்படாது. மேலும், ஞான, பக்தி, வைராக்கியம் ஏற்படும். `திருஷ்டி ஹோமம்’ `கண் திருஷ்டி மற்றும் எல்லா வகையான திருஷ்டியையும் விலகும். `மஹா ஹோமம்’ இந்த ஹோமம், மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சாபங்களிலேயே கொடிய சாபம் `பித்ரு சாபம்’. அதனை விலகச் செய்யும் ஹோமம்தான் இந்த மஹா ஹோமம். `மாதங்கி ஹோமம்’ செய்வதால், தேர்வுகளில் பெரும் வெற்றி, சங்கீதம் / நடனம் / எழுத்து / பேச்சுக் கலைகளில் திறமை பெருகும்.
கல்வித்திறன் உண்டாகும். `கமலாத்மிகா ஹோமம்’ வியாபாரிகளுக்கு மிக முக்கியதானவை. இந்த ஹோமத்தை செய்வதினால் வியாபாரத்தில் அபிவிருத்தி, வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை பெறலாம். `மஹா சண்டி யாகம்’ வேலை கிடைக்காமல் இருக்கும் நபர்கள், இந்த ஹோமத்தை செய்வதால் உடனடி வேலை வாய்ப்பு வரும்.
மேற்கூறிய ஹோமங்கள் நவராத்திரி நாட்களில் தில்லை கங்கா நகரில் அமைந்துள்ள சர்வமங்களா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெறுகிறது. நமது அருள் தரும் ஆன்மிக வாசகர்கள், அம்பாளின் அருளை பெற வேண்டுகிறோம். மேலும், நவராத்திரியில் தசமஹாவித்யா மஹாதேவியர் வழிபாடும் சிறந்த பலனளிக்கக்கூடியது. “தசமஹாவித்யா” என்று போற்றப்படும் பத்து மஹாதேவியரும், ஆதிபராசக்தியான அம்பாளின் அம்சங்களே ஆவர். காளி, தாரா, ஷோடசி, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா என்னும் பெயர் கொண்ட இந்த பத்து மஹாதேவியரையும் நவராத்திரி சமயம் பூஜை செய்வது சிறப்பானதாகும்.
காளி
காளியை வணங்கினால் எல்லா தெய்வங்
களையும் வணங்கியதாகும்.
ப்ரஹ்மா விஷ்ணு சிவோ கெளரீ லக்ஷ்மீர் கணபதி ரவி
பூஜிதா: ஸகல தேவா ய: காளீம் பூஜயேத் ஸதா
தாரா
ஸித்திகள் அளிப்பதில் தாரா தேவிக்கு சமமாக வேறு எந்த தெய்வமும் இல்லை.
நைவ தாரா ஸமா காசித் தேவதா ஸர்வ ஸித்திதா:
ஷோடசி
ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீலலிதா திரிபுரஸுந்தரி என்று போற்றப்படும் தேவி.
ஸ்ரீமாதா மஹாராஜ்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேஸ்வரி
புவனேஸ்வரி
எல்லா பிரபஞ்சங்களுக்கும் மூலமான புவனேஸ்வரி ஞானவடிவானவள்.
தேவதா சித்கலாரூபா புவனேஸீ பராத்மிகா
திரிபுரபைரவி
பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூவரால் பூஜிக்கப்பட்ட தேவி
ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸானை: த்ரிதேவைர் அர்ச்சிதா புரா
த்ரிபுரேதி ததா நாம கதிதம் தைவதை: புரா:
சின்னமஸ்தா
சின்னமஸ்தா தேவியின் அருளிருந்தால் ஸதாசிவனாகவே ஆகிவிடலாம்.
யஸ்யா ப்ரஸாத மாத்ரேண நர: ஸ்யாத்தி ஸதாசிவ:
தூமாவதி
சத்ருக்களை அழித்து பக்தனைக் காக்கும் தேவி.
சேதினீம் துஷ்டஸங்கானாம் பஜே தூமாவதீமஹம்
பகளாமுகி
பிரஹ்மாஸ்திர ரூபிணி. பக்தனின் சத்ருக்களை அழிப்பாள்.
ஓம் பகளாம்பாயை வித்மஹே ப்ரஹ்மாஸ்த்ர வித்யாயை தீமஹி
மாதங்கி
வேண்டியது அனைத்தையும் தரும் ராஜமாதங்கி. மதுரை மீனாட்சி
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
கமலாத்மிகா
தனம், தான்யம், செளபாக்கியம் தரும் மகாலட்சுமி.
மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி
தொகுப்பு: குடந்தை நடேசன்