டெல்லி: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் மொத்தம் ரூ. 90,000 கோடிக்கு விற்பனை செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விழாக் காலத்தின் முதல் 4 நாட்களில் ரூ. 29,000 கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளதாக அமேசான் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இவ்வாண்டுதான் இவ்வளவு விற்பனை நடந்துள்ளதாக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.