புவனேஷ்வர்: ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள ஆட்சியில் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியன், பேரவை தேர்தலுக்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களின் குறைகளையும், கருத்துகளையும் நேரடியாக கேட்க அரசு செலவில் ஹெலிகாப்டர்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மோகன் சரண் மாஜி தலைமையிலான பாஜ அரசு விசாரணையை தொடங்கி உள்ளது. ஒடிசா சட்டம், கலால் மற்றும் பணித்துறை அமைச்சர் பிரித்விராஜ் ஹரிசந்தன் கூறுகையில், “வி.கே.பாண்டியன் சென்ற ஹெலிகாப்டர்கள் வசதியாக தரையிறங்க 50 ஹெலிபேட்கள் கட்டப்பட்டுள்ளன. ஹெலிபேட்கள் அமைக்க யார் அனுமதி அளித்தார்கள். அதற்கான செலவுகள் எவ்வாறு செய்யப்பட்டன என்பது பற்றி முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.