புதுடெல்லி: முன்னாள் வெளியுறவு அமைச்சர் கே.நட்வர்சிங்(93) காலமானார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்னைகளால் குருகிராம்,மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இறந்தார்.
நட்வர்சிங்கின் மறைவையடுத்து பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிடுகையில், ராஜதந்திரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை உலகிற்கு அவர் வளமான பங்களிப்புகளை நட்வர் சிங் வழங்கினார். அவர் தமது அறிவாற்றல் மற்றும் எழுத்துத் திறமைக்காகவும் அறியப்பட்டார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என குறிப்பிட்டுள்ளார்.