1. கஸ்தூரி மஞ்சள் பேக் (பளபள சருமத்துக்கு)
தேவையானவை:
1 மேசைக்கரண்டி கஸ்தூரி மஞ்சள்
2 மேசைக்கரண்டி பசும்பால் / தயிர்
1/2 மேசைக்கரண்டி தேன்
செய்முறை:
இவற்றை கலந்து முகத்தில் தடவி 15, 20 நிமிடம் வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ முகம் பளபளக்கும்.
2. எலுமிச்சை + தேன் (கறைகள், கருந்திட்டுகள் மறைய)
தேவையானவை:
1 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு
1 மேசைக்கரண்டி தேன்
செய்முறை:
இவற்றை கலந்து முகத்தில் மிதமாக மசாஜ் செய்து தடவி 10 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவுங்கள்.கரும்புள்ளிகள் குறையும், முகம் பிரகாசிக்கும்.
3. வெள்ளரிக்காய் பேக் (புத்துணர்வான சருமத்திற்கு)
தேவையானவை:
2 மேசைக்கரண்டி வெள்ளரிக்காய் சாறு சிறிது ரோஸ் வாட்டர்
செய்முறை:
வெள்ளரிக்காய் சாறு, ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து பஞ்சு உதவியுடன் முகத்தில் தடவி 15 நிமிடம் வைக்கவும்.
சருமத்தின் உஷ்ணம் குறையும், தோல் மிருதுவாகும்.
4. பாசிப்பயறு மாவு கிளேன்சர் (மாசற்ற சருமம் பெற)
தேவையானவை:
1 மேசைக்கரண்டி பாசிப்பயறு மாவு
சிறிதளவு குங்குமப்பூ / ரோஸ் வாட்டர்
செய்முறை:
தோல் மீது தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து கழுவுங்கள்.
முகம் மாசு நீங்கசுத்தமாகும், மென்மையான சருமம் கிடைக்கும்.
5. தேன் + பப்பாளி பேக் (சரும வறட்சிக்கு)
தேவையானவை:
2 மேசைக்கரண்டி நன்கு நசுக்கிய பப்பாளி
1 மேசைக்கரண்டி தேன்
செய்முறை:
இவற்றை சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் வைக்கவும்.
உலர்ந்த தோல் ஈரப்பதம் பெற்று புத்துணர்வு பெரும்.
இத்துடன் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
எண்ணெய் நிறைந்த, உப்புத்தன்மை உள்ள உணவுகளை தவிர்க்கவும்
தூக்கம் மிக அவசியம் (7, 8 மணி நேரத் தூக்கம் அவசியம்). வாரத்திற்கு 2 முறை இயற்கையான ஸ்கிரப் (சக்கரை + தேன்) பயன்படுத்தலாம்.
– கவின்