பெரும்பாலும் தலை முடி பிரச்சனைகள் அத்தனைக்கும் உடலில் சூடு தான் காரணம். எதற்கு வீட்டிலேயே செய்து கொள்ள சில இயற்கையான பேக்ஸ் நல்ல பலன் கொடுக்கும்.
வெந்தயப் பேக்
செய்முறை:
2 மேசை கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைத்து விடவும். ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து சிறிது தயிர் கலந்து, தலைமுடிக்கு தேய்க்கவும். 30 நிமிடம் விட்டு கழுவவும்.
பயன்கள்: முடி உதிர்வை குறைக்கும், கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.
முட்டை + தேங்காய்ப்பால் பேக்
செய்முறை:
1 முட்டை வெள்ளைக்கருவுடன் 2 மேசை கரண்டி தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாக கிளறவும். தலைமுடிக்கு பூசி 20-30 நிமிடம் விட்டு சாம்பூ கொண்டு அலசவும்.
பயன்கள்: முடி மென்மையடையும், பளபளப்பாக மாறும்.
மருதாணி + லெமன் ஜூஸ் பேக்
செய்முறை:
3 மேசை கரண்டி ஹென்னா தூள்1 மேசை கரண்டி எலுமிச்சைச் சாறுதேவையான அளவு தேங்காய் எண்ணெய் அல்லது தயிர் சேர்த்து பேக் பயன்படுத்தி அலசலாம்.
பயன்கள்: தலையில் சூடு குறைக்கும், முடிக்கு நல்ல நிறம் வழங்கும்.
கீரை பேக்(கரிசலாங்கண்ணி /பொன்னாங்கண்ணி)
செய்முறை:
கீரையை அரைத்து பேஸ்ட் ஆக்கவும்.இதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைமுடிக்கு தேய்க்கவும்.30 நிமிடம் கழித்து அலசவும்.
பயன்கள்: முடி கருமையுடன் வளர்ச்சியடையும்.
கற்றாழை பேக்
கற்றாழையின் ஜெல் போன்ற பகுதியை தலையில் தேய்த்து மசாஜ் செய்து ஷாம்பூ கொண்டு அலசலாம்.