புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் தற்போது வரை குறையாமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற வணிக தளங்களில் அங்கீகரிக்கப்படாத வாக்கி-டாக்கி சாதனங்களை விற்பனை செய்வதற்கு எதிராக ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘‘ஆன்லைன் வர்த்தக தளங்களில் அங்கீகரிக்கப்படாமல் விற்கப்படும் வாக்கி-டாக்கிகள் மற்றும் பிற வானொலி உபகரணங்கள் ஒயர்லெஸ் பிளானிங் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் உபகரண வகைகள் ஒப்புதல் இல்லாமல் அல்லது உரிய முறையில் அனுமதிக்கப்படாத அதிர்வெண் வரம்புகளில் இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
16,970க்கும் மேற்பட்ட சட்டவிரோத உபகரணங்கள் பட்டியல்களில் வாக்கி டாக்கி உள்ளிட்ட 13,118 உபகரணங்களை ஆன்லைன் வர்த்தக பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனை மீறி விற்பனை செய்யும் ஆன்னைன் வர்த்தக தளங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.