சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்திலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காதது கடுமையான கிராமப்புற வேலையின்மையை உருவாக்கியுள்ளது. அதோடு அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலையேற்றம் கிராமப்புற ஏழைகளை வாட்டி வதைக்கும் நிலையில், வேலை செய்ததற்கான ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பது மக்களை மேலும் வதைக்கும் செயலாகும். ஆகவே, ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில், ஊரக வேலைத் திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும்.
தேசிய ஊரக வேலை திட்ட சம்பள நிலுவையை உடனே ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: பாலகிருஷ்ணன் கோரிக்கை
previous post