புனே: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 26வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) கட்சியின் தலைவர் சரத் பவார் விழாவில் பேசுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியானது பல சவால்களை எதிர்கொண்டது. ஆனால் கட்சியின் தொண்டர்கள் சோர்வடையாமல் கட்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுங்கள். கட்சியில் பிளவு ஏற்பட்டது. கட்சியில் பிளவு ஏற்படும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால் அது நடந்தது. சிலர் வேறு சித்தாந்தங்களுடன் பிரிந்து சென்றனர். வரும் தேர்தலில் வேறுமாதிரியான சூழல் நிலவும் என்றார்.
தேசியவாத காங். 26வது ஆண்டுவிழா
0