கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 4 குழுக்களாக கிளம்பியுள்ளனர். ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்தனர். பத்தினம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.